ஆன்லைன் வர்த்தக விபரீதம்... கல்லூரி மாணவி தற்கொலை... நடந்தது என்ன?
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை.
சென்னை மாவட்டத்தில் கல்லூரி மனைவி ஒருவர் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்திற்கு பணத்தை இழந்து அதன் காரணமாக தற்கொலை செய்து இருக்கும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக போர்ச்சுகீசிய தெருவை சேர்ந்தவர் அருண்குமார், இவருடைய மனைவி சாந்தி இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக புரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள் இருப்பதாக கூறப்படுகிறது, இதில் மூத்த மகள் மகாலட்சுமி என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
குறிப்பாக இவர் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ஈடுபாட்டுடன் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது. இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைனில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதன் மூலம் லாபம் கிடைக்கும் என்று அவர் நினைத்து இருக்கிறார். இதன் காரணமாக பங்குச்சந்தையில் சுமார் 30,000 வரை பணத்தைக் கட்டி இழந்து விட்டு இருக்கிறார்.
இதனை அறிந்த அவருடைய தாய் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் பொழுது இப்படிப்பட்ட செயல்களை செய்து பணத்தை இழந்து விட்டாள் என்று மகளை அவருடைய குடும்ப திட்டியதாக குறிப்பிடுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஒரு சம்பவம் அந்தப் பகுதிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Input & Image courtesy: News