தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு.!

தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.. தமிழக அரசு அறிவிப்பு.!

Update: 2021-01-08 18:56 GMT

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த விவகாரம் மத்திய அரசு வரை சென்றது. தியேட்டர்களில் மூடப்பட்ட அறைகளில் 100 சதவீதம் பார்வையாளர்கள் இருந்தால் கொரோனா விரைவில் பரவுவதற்கு வழி வகுக்கும் என சமீபத்தில் மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டது.

பழைய மாதிரி 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக நாட்டை விட்டு நீங்கிய பின்னர் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்தால் போதும் என பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News