நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தளங்கள் செயல்படும்.. மாவட்ட ஆட்சியர்.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தளங்களும் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இதனால் சுற்றுலாத்தளங்களும் பழைய மாதிரி முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தளங்களும் வழக்கம் போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். அதே நேரத்தில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இபாஸ் முறை தொடரும் என கூறினார்.