தமிழகம் முழுவதும் சுற்றுலா தளங்கள் திறப்பு.. மீண்டும் வளர்ச்சி பெறுமா சுற்றுலா தொழில்?

தமிழகம் முழுவதும் சுற்றுலா தளங்கள் திறப்பு.. மீண்டும் வளர்ச்சி பெறுமா சுற்றுலா தொழில்?

Update: 2020-12-14 10:25 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த சுற்றுலா தளங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகளிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 8 மாதங்களாக சுற்றுலாதளங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று முதல் சுற்றுலா தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கன்னியாக்குமரி மற்றும் பல அருவிகள் திறக்கப்பட்டுள்ளன.

மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டங்கள் விடுமுறை காலகட்டங்கள் என்பதால் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சுற்றுலா தளங்களும், அதை நம்பி தொழில் செய்வொர்களும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.

எனினும் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததாலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளை கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருவதாலும் சுற்றுலா தளங்களுக்கு மக்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பழைய மாதிரி சுற்றுலாத்தளங்கள் சூடு பிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கலாம். கொரோனா தொற்று முழுமையாக நீங்க வேண்டும் எனில் அனைத்து மக்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியமாகும்.
 

Similar News