காணாமல் போகும் குழந்தைகளை கண்டுப்பிடிக்க ‘ஆப்ரேசன் ஸ்மைல்’ திட்டம்.. ரயில்வே போலீஸ் அறிவிப்பு.!

காணாமல் போகும் குழந்தைகளை கண்டுப்பிடிக்க ‘ஆப்ரேசன் ஸ்மைல்’ திட்டம்.. ரயில்வே போலீஸ் அறிவிப்பு.!

Update: 2021-02-01 16:58 GMT

திருச்சி ரயில்வே நிலையத்தில் ‘ஆப்ரேசன் ஸ்மைல்’ என்ற புதிய திட்டத்தை ரயில்வே போலீசார் துவக்கி வைத்தனர். இதன் நோக்கம் காணாமல் போகின்ற குழந்தைகளை கண்டுப்பிடித்து அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் திட்டம் ஆகும்.

இந்த நிகழ்ச்சியை திருச்சி கோட்ட ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் துவக்கி வைத்தார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: காணாமல் போகின்ற குழந்தைகள், மற்றும் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், கொத்தடிமைகளாக செயல்படும் குழந்தைகளை மீட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என கூறினார்.

இந்த திட்டத்தை அனைத்து ரயில் நிலையங்களிலும் செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த திட்டத்திற்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ரயில் நிலையங்களில்தான் பாதி குழந்தைகள் காணாமல் போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News