அ.தி.மு.க தலைமை மாற்ற சர்ச்சைக்கு என்ன தீர்வு? களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர் பேரன் ! - தமிழக அரசியலில் பரபரப்பு!

அதிமுக தலைமைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை தேவை

Update: 2021-10-27 12:41 GMT

எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், எம்ஜிஆரின் பேரனுமான ராமச்சந்திரன் அதிமுக தலைமைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை ராமாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தொண்டர்கள் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை தலைமையாக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் இருவரும் கட்சிடை சிறப்பாக வழி நடத்துகின்றனர். இதனிடையே, சிலர் தனித்தனியாக பேட்டி கொடுத்து தொண்டர்களை குழப்பி வருகின்றனர். தலைமைக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பெரிய குழப்பம் நீடித்து வந்தது. தமிழகம் முழுவதும் அதிமுகவினா் இரு அணிகளாக பிரிந்து மோதிக் கொள்ளும் நிலை இருந்தது. பிறகு ஜானகியுடன் ஜெயலலிதா பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஜானகி பின்வாங்கிக் கொள்ள, சுமுகத் தீா்வு காணப்பட்டு, அதிமுக ஒன்றிணைந்து ஆட்சியையும் பிடித்தது. இப்போதும் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இல்லை.

இந்திய தோ்தல் ஆணையமும், தில்லி உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சசிகலாவின் கோரிக்கையை முழுமையாக நிராகரித்துவிட்டு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட அனுமதித்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தையும் திரும்ப ஒப்படைத்துள்ளது. இதையெல்லாம் மீறி சட்டத்தை சசிகலாவே எடுத்துக்கொண்டு பொதுச்செயலாளராக அறிவித்துக் கொள்வது தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.




Tags:    

Similar News