புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நிதியுதவி.!
நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரபி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். புதிதாக உருவான டவ் தே புயலில் சிக்கி கடந்த 15ம் தேதி மீனவர்கள் மாயமானார்கள்.
நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் அரபி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். புதிதாக உருவான டவ் தே புயலில் சிக்கி கடந்த 15ம் தேதி மீனவர்கள் மாயமானார்கள்.
இதில், சாமந்தான் பேட்டையை சேர்ந்த இடும்பன், மணிவேல், மணிகண்டன், சிதம்பரம் முருகன், நாகூர் தினேஷ், அக்கரைபேட்டை பிரவின், மயிலாடுதுறை இளஞ்செழியன் உள்ளிட்ட 9 மீனவர்கள் காணாமல் போனார்கள். காணாமல் போன மீனவர்களை மீட்டுதரும்படி அவர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து 9 மீனவர்களின் குடும்பத்தினருக்கும் அதிமுக சார்பில் தலா, ரூ.10 ஆயிரம் நிவாரண உதவியை வழங்கினார்.