மதுராந்தகம் ஏரியில் உபரிநீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

மதுராந்தகம் ஏரியில் உபரிநீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!

Update: 2020-11-27 18:18 GMT

நிவர் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. புயல் பற்றிய தகவல்களை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அளித்து வந்தது. அதீத கனமழை பெய்யும் என கூறியது. அதன்படி தொடர்ந்து 2 நாட்களுக்கு அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய்த கனமழையால் ஏரி, குளங்கள் நிரம்பின. தற்போது பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதால், உபரி நீர் திறக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கத்திலிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னுத்திக்குப்பம், நீலமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை நிவார்ண முகாம்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News