ஆக்சிஜன் பற்றாக்குறையா.. 104 நம்பரை தொடர்பு கொள்ளலாம்.. தமிழக அரசு அறிவிப்பு.!
மருத்துவமனை மற்றும் நர்ஸிங் ஹோம்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தால் 104 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் பெரும் வரும் கொரோனா தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு கூடுதலாக ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. வடமாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பிரச்சனை நிலவுவதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து தமிழகத்தில் போதுமான அளவிற்கு ஆக்சிஜன் உள்ளது என தமிழக அரசு விளக்கம் கொடுத்திருந்தது.
இந்நிலையில், மருத்துவமனை மற்றும் நர்ஸிங் ஹோம்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தால் 104 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று குறித்து அறிந்து கொள்வதற்கு ஹெல்ப் லைன் நம்பர் ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தவிர மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே 4 தொடர்பு நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பொது சுகாதாரத்துறை 24 மணிநேரமும் இயங்கும் நம்பரும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும்போது, 104 என்ற உதவி நம்பரை தொடர்பு கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.