கோவை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு பற்றாக்குறை.!
கோவை மாவட்டத்தில் தினமும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தினமும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் தினமும் 3000க்கும் அதிகமானோர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 3,944 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 1,38,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1000க்கும் குறைவாக இருந்தனர். ஆனால் தற்போது 30,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.