5வது முறையாக மதுரைக்கு வந்த 9.64 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்.!

ஒடிசா மாநிலத்திலிருந்து மதுரைக்கு 5வது முறையாக 6 டேங்கர்களில் 9.64 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது.

Update: 2021-06-01 12:16 GMT

ஒடிசா மாநிலத்திலிருந்து மதுரைக்கு 5வது முறையாக 6 டேங்கர்களில் 9.64 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவத்தால், நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் மருத்துவமனையில் குவியத்தொடங்கியது. இதனால் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.


 



இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு விமானம் மற்றும் சரக்கு ரயில் மூலமாக ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கான 5வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு வந்தது.




 


ஒடிசா மாநிலம், ரூர்கேலாவிலிருந்து 6 டேங்கர் லாரிகளில் 90.64 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்திற்கு 35 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்துள்ளது.

Tags:    

Similar News