வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள்.. நிவாரணம் வழங்க நெல்லை விவசாயிகள் கோரிக்கை.!

வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள்.. நிவாரணம் வழங்க நெல்லை விவசாயிகள் கோரிக்கை.!

Update: 2021-01-15 11:58 GMT

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்லலை மாவட்டம் சுத்தமல்லி அடுத்த கொண்டா நகரம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்று வெள்ளப் பெருக்கால் விளை நிலங்களுக்குள் வெள்ளம் கடந்த 3 நாட்களாக பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 3வது நாளாக விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் நெற்பயிர்கள் அனைத்தும் தலை சாய்ந்து கிடக்கிறது.

இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர்.

Similar News