திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர் - என்ன நடக்கிறது தமிழகத்தில்?
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கிடையில் பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கப்பட்டு வந்தது. இதனிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் திறந்த பின்னரும் அங்கு உள்ள கடைகள் வாடகை பிரச்சினை காரணமாக இன்னும் திறக்கப்படவில்லை.
இதன் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே அங்கு காணப்படுகிறது. கட்டடங்கள் அதிகமாக பேருந்து நிலையம் மாறியதால் குறைந்தளவு பேருந்துகளே நிறுத்தப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பேருந்து நிலையத்தில் உள்ள ஜூஸ் கடை அருகில் மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். ஆனால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu