திருப்பூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. துணை வட்டாட்சியர் அதிரடியாக கைது.!
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு அதிகாரிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கேத்தனூரை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் தனது நிலத்தில் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் கேட்டுள்ளார். அப்போது வங்கி அதிகாரி பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் வேண்டி ராஜாமணி விண்ணப்பம் அளித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த துணை வட்டாட்சியர் மேகநாதன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படும் என கூறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாமணி லஞ்ச ஒப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரை தொடர்ந்து, ரசாயனம் கலந்த ரூ. 10 ஆயிரத்தை ராஜாமணியிடம் கொடுத்துள்ளனர். இதனை வாங்கிக்கொண்டு துணை வட்டாட்சியர் மேகநாதனிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேகநாதனை கைது செய்தனர். பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்று கைதான துணை வட்டாட்சியர் செயலால் மற்ற அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.