நாகப்பட்டினம்: பஞ்சாயத்து கிளார்க் வேலைக்கு ரூ.10 லட்சத்திற்கு ஏலம்.. யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம்.. போஸ்டர் அடித்த கிராம மக்கள்.!
நாகப்பட்டினம் மாவட்டம் அருகே உள்ள ஒரு பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் பணி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் விட்டுள்ளதாக ஊர் மக்கள் போஸ்டர் அச்சடித்த சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் அருகே உள்ள ஒரு பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் பணி ரூ.10 லட்சத்திற்கு ஏலம் விட்டுள்ளதாக ஊர் மக்கள் போஸ்டர் அச்சடித்த சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து பதவிகளையும் பணம்தான் தீர்மானிக்கும் நிலை வந்துள்ளது. சாதாரண பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் பணியை ரூ.10 லட்சத்துக் ஏலம் விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், பெருங்கடம்பனூர் ஊராட்சியில் செயலாளர் பணிக்கு ரூ.10 லட்சம் ஏலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் போஸ்டர் அச்சடித்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைதலைவர், வார்டு உறுப்பினர் இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு பொருங்கடம்பனூர் ஊராட்சியில் ஊராட்சி எழுத்தர் பணிக்கு தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதை விட்டு விட்டு ஊராட்சி எழுத்தர் பணி ரூ.10,00000 ஏலம் போய்விட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் தீபா மாரிமுத்து ரூ.6,00,000, துணைத்தலைவர் முருகேசன் ரூ.3,00000, வார்டு உறுப்பினர்கள் ரூ.1,00,000 ஆகியோர்களுக்கு வினியோகிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.