தரம் இல்லையா? கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வந்த புதிய பாலம் இடிந்து விழுந்தது!
தஞ்சை மாவட்டத்தையும், சென்னை உட்பட வடமாவட்டங்களை இணைக்கும் வகையில் கும்பகோணம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக புதிதாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் 5வது தூண் அருகே இணைப்புக்காக போடப்பட்டிருந்த பலகை இடிந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. ஆற்றில் கட்டப்பட்ட பாலம் திடீரென்று இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் அதிகமான தண்ணீர் வரும்காலங்களில் பாலம் விழுந்தால் பொதுமக்களின் நிலை என்னாவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi