பென்னாகரம் அருகே முனியப்பன் கோயில் சிலைக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு.!

இதே போன்று இரண்டு வருடங்களுக்கு முன்னரும், முனியப்பன் கோவிலை அவமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-04-23 05:48 GMT

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் டூ ஒகேனக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் உள்ளது. அந்த கோவிலில் உள்ள சாமி சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு தீ வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் கோவில் முன்பாக கூடி கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்.


 



இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களுக்கு வலை வீசி தேடி வருகின்றனர். இதே போன்று இரண்டு வருடங்களுக்கு முன்னரும், முனியப்பன் கோவிலை அவமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News