இங்கிலாந்து டூ சென்னை வந்தவர்கள் கண்காணிப்பு வளையத்தில்.. மாநகராட்சி ஆணையர்.!

இங்கிலாந்து டூ சென்னை வந்தவர்கள் கண்காணிப்பு வளையத்தில்.. மாநகராட்சி ஆணையர்.!

Update: 2020-12-22 13:29 GMT

இங்கிலாந்தில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவரையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்த பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

இது பற்றி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்: உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் வசிக்கும் தெருவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மாநகராட்சியினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கடந்த ஒரு மாதமாக பிரிட்டனிலிருந்து வந்தவர்களை கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

முன்னதாக, அவசர அவசரமாக கொரோனா ஃபைசர் தடுப்பு மருந்துக்கு ஓப்புதல் அளித்து, உலகிலேயே முதன்முறையாக தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. தற்போது மற்றொரு பேராபத்துக்குள் இங்கிலாந்து சிக்கியுள்ளது. 

இதனிடையே பிரிட்டனிலிருந்து டெல்லி வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றா என கண்டறியும் சோதனைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

Similar News