தமிழ் புத்தாண்டில் இதை தவிர்ப்போம் என உறுதிமொழி... மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியது எதை?

தமிழ் புத்தாண்டில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற உறுதி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்.

Update: 2023-04-14 13:19 GMT

சமீப காலமாக பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளைக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அருகில் உள்ள கடைகளுக்கு சென்றால் கூட முன்பை போல் மஞ்சப்பை எடுத்துக் கொண்டு செல்லாமல் தற்பொழுது பாலிதீன் பைகளை பயன்படுத்தும் பழக்கம் அனைவரிடமும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக சிறிது சிறிதாக பிளாஸ்டிக் பையின் தாக்கம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது சுற்றுச்சூழலாக இருந்தாலும் சரி அல்லது சுற்றுச்சூழலில் இருக்கும் உயிரினங்கள் கால்நடைகளை பாதிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்.


இது பற்றி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக அந்த செய்தி குறிப்பில் இது பற்றி கூறுகையில், பிளாஸ்டிக் அதாவது பாலிதீன் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக அளவு எடை கொண்ட பாலிமர்லிருந்து எடுத்து பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்துவதற்கும் கையாளுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏனெனில் அவை மக்கா தன்மை கொண்டது, இதன் மூலமாக நிலத்தடி நீர் உள்ளே செல்வதற்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நெய்யப்பட்டy பைகள் அல்லது மக்கும் வகையில் இருக்கக்கூடிய பைகளை பயன்படுத்துவோம். விற்பனையாளர்களிடமும் கடைகாரர்களிடமும் இதைதான் உபயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.


இதுபோன்ற ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மறுசுழற்சி செய்யக்கூடிய பைகளை பயன்படுத்த வேண்டும். எனவே இந்த தமிழ் புத்தாண்டில் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்ப்போம். மேலும் இது பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்த தமிழ் புத்தாண்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கொண்ட மாற்றுக்களை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News