அதிர்ச்சி! நீலகிரியில் யானை மீது நெருப்பை வீசி கொன்ற மனிதர்கள்!

அதிர்ச்சி! நீலகிரியில் யானை மீது நெருப்பை வீசி கொன்ற மனிதர்கள்!

Update: 2021-01-23 07:15 GMT

நீலகிரி மாவட்டத்தில் யானை ஒன்று தீக்காயங்களுடன் சுற்றி வந்தது. இதற்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானையை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம், மசினகுடியில் காட்டு யானை சென்றுள்ளது, அதன் மீது எரியும் டயர் வீசியுள்ளனர். இந்த டயர் யானையின் காதில் மாட்டிக்கொண்டுள்ளது. இதனால் யானை வலி தாங்க முடியாமல் வனப்பகுதியை நோக்கி அலறிக்கொண்டு ஓடியுள்ளது. யானையின் காதின் அருகே பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மூலமாக சுமார் 40 லிட்டர் அளவிற்கு ரத்தம் வெளியேறியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் யானையின் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

மனிதாபிமானமே இல்லாத மனிதர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். சமீபகாலமாக காட்டு யானைகளின் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மனித இனத்தை அழிவுக்கு கொண்டு செல்வதற்கும் வழிவகுக்கும். இது போன்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News