ஊட்டி: கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரம் காத்திருந்த மக்கள்.!

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 100 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே இருந்தது. ஆனால் தடுப்பூசி போடுவதற்கு 200க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.

Update: 2021-06-22 06:16 GMT

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 100 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே இருந்தது. ஆனால் தடுப்பூசி போடுவதற்கு 200க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.

மேலும், தடுப்பூசி போடுவதற்காக சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்த நிலையில் தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் சரியான தடுப்பூசி பற்றிய இருப்பை சொல்லாமல் காத்திருக்க வைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News