பெரம்பலூரில் மற்றொரு கோயில் சேதம்: நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்துக்கள் சாலை மறியல்!
பெரம்பலூர் அருகே சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து இந்துக்கள் ஒன்றிணைந்து திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து இந்துக்கள் ஒன்றிணைந்து திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் பெரியசாமி கோயில் சிலைகளை கடந்த 6ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து நாசமாக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மற்றொரு கோயிலில் உள்ள சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து சாமி சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக உள்ளதாக இந்துக்கள் குற்றம்சாட்டினர். இதனால் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குறறவாளிகளை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Face book