'மச்சான் எப்போ வரப்போற?' - ஆடலும், பாடலும் நிகழ்ச்சியை போல் அரசு ஆடிய அரசு அதிகாரி!

Update: 2022-12-11 04:06 GMT

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி கலந்து கொண்டார்.

அப்போது நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே... என்ற பாடலுக்கு நடனம் ஆடினார்.

டாக்டர் கீதாராணியின் அந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே டாக்டர் கீதாராணி அரியலூர் மாவட்டத்தில் நடந்த நூற்றாண்டு விழாவிலும் இதே பாடலுக்கு நடனமாடினார்.

மேலும் அவர் அந்த விழாவில் கரகத்தை தலையில் சுமந்தும், சிலம்பம் சுற்றியவாறும் சினிமா பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News