சென்னை: நாளை முதல் புறநகர் ரயிலில் பொதுமக்களும் பயணிக்கலாம்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே சென்னையில் புறநகர் ரயில்கள் அவ்வப்போது இயக்கப்பட்டு வந்தன. தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியதும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இந்நிலையில், சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், நாளை முதல் (ஜூன் 25) புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.