கேங்மேன் பணியிடங்களை நிரப்ப அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கேங்மேன் பணியிடங்களை நிரப்ப அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Update: 2021-02-22 18:30 GMT

தமிழக மின்வாரியத்தில் உள்ள கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்த நிலையில், தனியார் மூலமாக ஆட்களை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2019ம் ஆண்டு களப்பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு பணியிடமாக கேங்மேன் பணியிடங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த ஊழியர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்றைய விசாரணையில், மின்சாரத்துறையில் உள்ள 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு சார்பாக வாதிடுகையில், புதிதாக கேங்மேன் நியமனம் செய்யப்பட்டாலும், ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் பணியாற்றுவார்கள்.

உடல்தகுதி தேர்வு உட்பட 70 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நியமனம் செய்யப்பட்ட கேங்மேன் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்கள் என்று வாதிடப்பட்டுள்ளது.
 

Similar News