தமிழகத்தில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: என்ன நடக்கிறது என அதிருப்தியில் மக்கள்?
தமிழகத்தில் தற்பொழுது மீண்டும் சென்னையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியான வண்ணம் அரங்கேறி வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அந்த சம்பவம் அரங்கே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரவன் என்பவர். இவர் போரூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் மது போதைக்கு அடிமையாகி தினமும் குடிப்பவர் என்று கூறப்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் இவர் 10 மணியளவில் குடிபோதையில் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்து இருக்கும் டாஸ்மார்க் கடை ஒன்றிற்கு சென்று இருக்கிறார்.
ஆனால் ஊழியர்கள் விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டு கணக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். எனவே விற்பனை நேரம் முடிந்ததன் காரணமாக சரக்கு தர முடியாது என்றும் மறுத்து இருக்கிறார்கள். இதன் காரணமாக கதிரவன் என்பவர் ஊழியர்களிடம் மதுபானம் தருமாறு கேட்டு இருக்கிறார். விற்பனை முடிந்ததால் தர முடியாது என்று வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மதுவிற்கு அடிமையான அவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.
அதிலிருந்து பெட்ரோலை காலி செய்து காலி மது பாட்டிலில் நிரப்பினார். மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி பிறகு டாஸ்மார்க் கடைக்கு சென்று பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை பற்ற வைத்து கடையை பார்த்து எரிந்து இருக்கிறார். இந்த பெட்ரோல் குண்டு காரணமாக தீப்பிடித்து எரிந்து இருக்கிறது டாஸ்மார்க் கடை. இதை பார்த்த பொதுமக்கள் அதிருப்தியில் அடைந்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi News