நடக்கும் சம்பவங்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - பி.எஃப்.ஐ தலைவர்

அசம்பாவித சம்பவங்களுக்கும் எங்களுக்கும் இது தொடர்பும் இல்லை என்று PFI தலைவர்.

Update: 2022-09-26 08:35 GMT

கடந்த 22 ஆம் தேதி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளுக்கு என்.ஐ.ஏ சோதனையும் மேற்கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து நிர்வாகத்தில் பல்வேறு நபர்களையும் கைது செய்து இருக்கிறார்கள். இந்த ஜனநாயக விரோத கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதற்கு இந்த கைது நடவடிக்கை? என்ற செய்தியை கூட இதுவரை எங்கேயும் தெரிவிக்கவில்லை என்று பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவில் மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.


மேலும் எங்களுக்கு முழு ஆதரவையும் கைது நடவடிக்கையை கண்டித்தும் ஜனநாயக கட்சிகள் மற்றும் தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளுக்கும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்த சூழ்நிலை விரும்பாத சிலர் எங்கள் அமைப்புகளின் மீது அவதூறுகளை அளித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சில சம்பவங்கள் நடந்து கொண்டு வருகிறது. பெட்ரோல் எரிதல் பெட்ரோல் குண்டு வீச்சு கூடிய சம்பவம் நிகழ்வு நடக்கிறது. எங்களைப் பொருத்தவரை இந்து சோதனையும் சட்டரீதியாக ஜனநாயக ரீதியாக போராட்டங்கள் மூலம் வென்று காட்டுவோம். எங்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லை, இருந்தாலும் பா.ஜ.க பேசியிருந்த சிலர் எங்களை தான் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.


எங்களுக்கும் இந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். எங்கள் மீது குற்றம் சாட்டக் கூடிய பா.ஜ.கவை சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட வரலாறுகள் இருக்கிறது. பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மாநில அரசுக்கு எதிராக சட்ட ஒழுங்கு சீர்குலைக்க அடிப்படையில் காரியங்களை செய்து வருகிறது என்று அவர் தன்னுடைய பேட்டியின் போது கூறுகிறார்.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News