ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு 12 கோடி ஒதுக்கீடு: உயர்கல்வித்துறை உத்தரவு!

120 மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் முதலமைச்சர் ஆராய்ச்சி உதவி தொகை திட்டத்திற்கு 12 கோடி ஒதுக்கீடு.

Update: 2023-03-04 00:49 GMT

தமிழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், மேலும் புதிய கண்டுபிடிப்புகள் தமிழக மாணவர்கள் உருவாக்கிட அவர்களை ஊக்குவிப்பதற்காக முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த திட்டம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக முதல் படியாக தற்போது 12,000 கோடி ஒதுக்கீடு செய்ய இருப்பதாக உயர்கல்வித்துறை உத்தரவை பிறப்பது இருக்கிறது.


முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தில் சுமார் 120 மாணவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு பயன்பட இருக்கிறார்கள். இதற்காக 12 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரத்து உயர்கல்வித்துறை ஒதுக்கி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இதற்காக மாநில அளவில் தகுதி திட்ட தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்ய இடம் இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.


குறிப்பாக கலை, மனித வளம் மற்றும் கல்வி சார்ந்த ஆராய்ச்சி படிக்கும் 60 மாணவர்கள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் படிக்கும் 60 மாணவர்கள் என மொத்தம் 120 மாணவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அமையும். அறிவியல் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் மனித மற்றும் கலை பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் விகிதமும் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News