ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி: பொதுமக்கள் குற்றச்சாட்டால் நிலவும் பரபரப்பு!
ரேஷன் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி கலந்து வினியோகம் செய்வதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.
ஏழை எளிய மக்கள் தினமும் வயிறார உணவருந்த வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஒரு வருடம் மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை நீடித்து இருக்கிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் சுமார் 5 கிலோ அரிசி அல்லது ஐந்து கிலோ கோதுமைகளை ரேஷன் கடைகளில் மூலம் இலவசமாக பெற்றுக்கொண்டு பயன் பெற முடியும். ஆனால் தமிழகத்தில் வழங்கப்படும் அரிசியானது பிளாஸ்டிக் அரிசி கலந்து விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த அரிசியை வேக வைத்து உண்ணும் பொழுது அவை பசை போல் பொங்கி வருவதாகவும் ஒரு சிலருக்கு உடல்நல உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை இருந்து வெளியேறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக ரேஷன் கடைகளில் இந்த அரிசியை பெற்றுக்கொண்ட பெண்கள் தங்களுடைய வீடுகளில் இதை சமைத்து உண்ணும் பொழுது தான் அவை பிளாஸ்டிக் அரிசி என்பது தெரிய வந்து இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜக்கேரி என்ற ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு ரேஷன் கடையில் தான் இத்தகைய அரிசி வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 முதல் 35 கிலோ வரை அரசு வழங்கி வந்த நிலையில் 5 கிலோ முதல் 8 கிலோ வரை பிளாஸ்டிக் அரிசிகள் அதில் கலந்து இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
அரிசியை வேக வைத்து சமைக்கும் பொழுது தான் அவை பிளாஸ்டிக் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இது குறித்து அதிகாரிகள் கூறும் பொழுது, மக்களுக்கு வழங்கப்படும் அரிசி ஆனது பிளாஸ்டிக் அரிசி இல்லை. அது செறிவூட்டப்பட்ட அரிசி, அந்த அரிசியில் இரும்பு சத்து, B12 மற்றும் போலியோ ஆசிட் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy:Maalaimalar