12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 8,16,473 பேர் தேர்ச்சி.. 600க்கு 600 மார்க் யாரும் இல்லை.!

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 3,80,500, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை 4,35,973 ஆக உள்ளது.

Update: 2021-07-19 06:21 GMT

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இந்த ஆண்டு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். வருகின்ற ஜூலை 22ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 3,80,500, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை 4,35,973 ஆக உள்ளது.

மேலும், பொதுப்பாடப்பிரிவில் 7,64,593 பேரும், தொழிற்பாடப்பிரிவு 51,880 பேர் என்று மொத்தம் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் யாரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News