பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம் - ₹912.19 கோடி ஒதுக்கீடு!
பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் ₹ 912.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழக ஊராக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா அவர்கள் அரசாணை வெளியிட்டு இருக்கிறார். அந்த அரசாணியில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் இதர மக்களுக்கு கடந்த 2018 மற்றும் 19 ஆம் ஆண்டுக்கான நிலுவை 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் 2.89 லட்சம் வீடுகள் கட்ட சுமார் 3,564.98 கோடி தொகையில் நான்கில் ஒரு பங்காக தற்பொழுது 891.12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தற்போது பல்வேறு முயற்சிகளை மக்களுக்காக எடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த தொகையுடன் மாநில அரசு தனது பங்கையும் சேர்த்து 1,485.21 கோடியை ஒதுக்கியது. பின்னர் மத்திய அரசு தனது பங்குத் தொகையில் மீதம் உள்ள 2673.86 கோடியில் 891.36 கோடியே தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது. அதன் பின்னர் 667 புள்ளி 45 கோடியில் அடுத்த கட்டமாக ஒதுக்கி உள்ளது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் ஆதிதிராவிடர் மற்றும் இதர பிரிவினருக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 547.31 கோடியுடன் மாநில அரசின் பங்குத் தொகையை பங்குத்தொகை 364.84 கோடியின் சேர்த்து 912.19 கோடியே ஒதுக்கும் படி, தமிழக அரசை கேட்டுக் கொண்டனர். அதன்படி மத்திய அரசின் 60% பங்கான 547 கோடியை 31 லட்சத்து 47 ஆயிரம் மற்றும் மாநில அரசு 40% பங்கான 3 ஆயிரத்து 64 கோடியை 87 லட்சத்து 64,000 என மொத்தம் 912 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரத்து தமிழக அரசு ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
Input & Image courtesy: Oneindia News