பாகன் தம்பதிகளான பொம்மன் - பெள்ளி... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த உணர்ச்சி பூர்வமான தருணம்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை சந்தித்தார்.

Update: 2023-04-10 02:29 GMT

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வருகைதந்து இருந்தார். `Project Tiger’ எனப்படும் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டதன் 50-வது ஆண்டை‌ முன்னிட்டு சிறந்த புலிகள் காப்பகங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். நாட்டில் மொத்தமுள்ள புலிகளின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதுமலைக்கு சென்று அங்கு இருக்கும் யானைகளை பராமரித்து வரும் பாகன் பொம்மை மற்றும் பெள்ளி தம்பதியினரை பார்த்து இருக்கிறார்.


தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். மேலும் இவர்களைப் பற்றி அறியாதவர்கள் இல்லை என்று அளவிற்கு இவர்கள் மிகவும் பிரபலமாகி விட்டார்கள். மிகவும் எளிமையாக பழகக் கூடியவர்களான இவர்கள் அந்த ஒரு ஆவணப்படத்திற்கு பிறகு உலகம் அறிந்த ஒரு நபர்களாக மாறிவிட்டார்கள்.


இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை நேற்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் பார்வையிட்டார். பிரதமருடன் மிகவும் நெருக்கமாக அவர்கள் உரையாடிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பகிரப்பட்டு வருகிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News