பிரதமர் மோடி வருகையில் கவனம் செலுத்தும் தமிழகம்: உச்சகட்ட பாதுகாப்பில் தலைநகரம்!

பிரதமர் மோடி அவர்கள் வருகையின் காரணமாக தமிழகத்தின் தலைநகரம் சென்னை உச்சகட்ட பாதுகாப்பில் உள்ளது.

Update: 2022-05-26 13:01 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டுவதற்காக மற்றும் துவக்கி வைப்பதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் தற்போது விஜயம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாதுகாப்பிற்காக ஐந்தடுக்கு பாதுகாப்பு அம்சம் ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நபரும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளைவின் கீழ்தான் தேர்வு ஸ்டேடியத்திற்கு செல்ல வேண்டும். எனவே தற்போது சென்னை உச்சகட்ட பாதுகாப்பில் இருந்து வருகிறது.


மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் நிகழ்ச்சிக்குப் பிறகு ஏழு பத்து மணிக்கு சென்னை கடற்கரை சாலை வழியாக தன்னுடைய காரில் புறப்படுகிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து உள்ளது தமிழக காவல்துறையினர்.

Input & Image courtesy: Thanthi news

Tags:    

Similar News