தனக்கு பிடித்தமான தமிழ் மண்ணுக்கு வருகிறார் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
திண்டுக்கல்லில் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 11ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார்.
தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் சீடரான டாக்டர் டி.எஸ்.சௌந்தரம் மற்றும் டாக்டர் சி.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்த 1947 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அருகே காந்திகிராமத்தை உருவாக்கினார். மேலும் இவர்கள் காந்தி கிராம நிறுவனத்தை ஏற்படத்தை அதன் மூலம் சமூகம் பணியோடு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்தனர். காந்திகிராம நிறுவனம் தொடங்கப்பட்ட 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த காந்திகிராம பவள விழா கொண்டாட்டத்திற்கு மற்றும் 36 ஆவது பட்டமளிப்பு விழாவும் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருகிறார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளின் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்குகிறார். இதன் காரணமாக மதுரைக்கு தனி விமானத்தில் அவர் வருகிறார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி காந்திகிராம பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொறிவு பெற்று வருகிறது. மேலும் ஹெலிகாப்டர் இறங்குதலத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று ஹெலிகாப்டர் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் ஹெலிகாப்டர் இறங்குதலும் ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போல சார்பாக ஈடுபட்டு உள்ளார்கள். மேலும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி மேலும் பல்வேறு போலீஸ் தரப்பில் இருந்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் காந்திகிராம் பல்கலைக்கழகத்து துணைவேந்தர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Maalaimalar News