தமிழக மாணவர்களுடன் ஆர்வமாக உரையாடிய பிரதமர்: எங்கு சந்தித்தார்கள் தெரியுமா?
ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் இருந்து வருகை புரிந்த மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சந்தித்து உற்சாகப்படுத்தினார்.
கல்வி சுற்றுலா என்பதன் பெயரில் மத்திய அரசின் சார்பாக முன்மாதிரியாக திகழும் மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இந்திய நாட்டின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. அந்த வகையில் அதனுடைய முதல் நாளான கல்வி சுற்றுலா பயணத்தில் தமிழக மற்றும் ஆந்திராவை சேர்ந்த மாணவர்கள் டெல்லியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள். குறிப்பாக தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் டெல்லி வரை சென்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழக மாணவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனதார நன்றி! இராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் இருந்து வந்திருக்கும் மாணவ, மாணவியரை சந்தித்து அவர் பேசி இருப்பது அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இருக்கிறது. அவர்கள் மனதில் இத்தருணம் நிலைத்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகம் இல்லை என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக டெல்லியில் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக மாணவர்கள் அங்கு இருக்கும் பிரதமர் அருங்காட்சியகம் (பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா) அழைக்கப்பட்டு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தார்கள். குறிப்பாக பிரதான் மந்திரி அருங்காட்சியகம் என்பது நேரு அருங்காட்சியகத்தின் புதிய வடிவமாகும். இதில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் அனைத்து பிரதமர்களின் பங்களிப்பையும் எடுத்த காட்ட எடுத்த முயற்சியாகும். எனவே 'பிரதமர் அருங்காட்சியகம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Mediyaan News