பழனியில் போலீஸ் எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு: அதிர்ச்சியில் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மற்றும் அவரது நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-02-07 05:13 GMT
பழனியில் போலீஸ் எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு: அதிர்ச்சியில் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., மற்றும் அவரது நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணியாற்றி வருபவர் சந்தானகிருஷ்ணன். இவர் தனது நண்பர் ஆனந்தன் என்பவருடன் பேசி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஆயுதங்களுடன் வந்த சிலர் ஆனந்தனை வெட்ட முயற்சி செய்துள்ளனர். அவர்களை தடுக்க முயன்ற போலீஸ் எஸ்.ஐ. சந்தானகிருஷ்ணன் மீது அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் போலீசார் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News