திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை படு ஜோர்: பலிகடா ஆகும் கூலித் தொழிலாளர்கள்!

திருச்சியில் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தற்போது இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2021-11-11 09:04 GMT

திருச்சியில் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தற்போது இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டில் கடைசியாக ஒரு நம்பர் மட்டும் இருந்தால் 100 ரூபாயும், இரண்டு நம்பர் இருந்தால் 1,000 ரூபாயும், மூன்று நம்பர் இருக்கும் பட்சத்தில் 25,000 ரூபாய் என்று பரிசுகள் விழுவதாக கூறி கூலித்தொழிலாளர்களை குறி வைத்து விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது.

லாட்டரி சீட்டால் பல லட்சம் பரிசு விழும் என்ற நம்பிக்கையில் ஏழை தொழிலாளர்கள் தாங்கள் சம்பாதித்து வைத்துள்ள பணத்தை லாட்டரிகள் வாங்குகின்றனர். அது போன்றவற்றில் பரிசுகள் விழவில்லை என்றால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

இது போன்ற லாட்டரி விற்பனை கடந்த 2003ம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தடை செய்தார். அது மட்டுமின்றி பிற மாநில லாட்டரி சீட்டுகளையும் தமிழகத்திற்குள் கொண்டு வந்து விற்கக்கூடாது என்று கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அப்போது காலக்கட்டத்தில் லாட்டரி விற்பனை என்பது முற்றிலும் இல்லாமல் இருந்தது. ஆனால் திமுக ஆட்சி அமைந்த பின்னர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அது போன்ற ஒரு நிகழ்வு திருச்சியில் அரங்கேறியுள்ளது.

திருச்சி உறையூர் தெருவைச் சேர்ந்தவர் மணவாளன். இவர் அப்பகுதியை சேர்ந்த ராமலிங்கம், வாத்துக்காரத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடமிருந்து கேரள லாட்டரி சீட் ஒன்றை வாங்கியுள்ளார். அதில் ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசுத்தொகையை மணவாளன், ராமலிங்கம், செந்தில்குமார் ஆகியோரிடம் கேட்டுள்ளார்.

அந்த சமயத்தில் அவருக்கு 200 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதம் 800 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணவாளன், இது தொடர்பாக உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து மணிவண்ணனை போலீசார் பிடித்து விசாரித்ததில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து செந்தில் குமார், ராமலிங்கம் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Source, Image Courtesy: Vikatan


Tags:    

Similar News