கஞ்சா பதுக்கி வைத்திருந்த கூட்டுறவு சங்க தலைவர்!
கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த கூட்டுறவு சங்கத் தலைவர் கைது செய்ய பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சோழவந்தான் கிராமத்தில் தான் கூட்டுறவு சங்கத் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தான், தற்பொழுது கஞ்சா பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார்கள். அங்கு உள்ள கருப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் செல்வகுமார் இவர்கள் கருப்பட்டி ஊராட்சி கூட்டுறவு சங்கத்தில் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இவரை போலீசார் கஞ்சா பதுக்கி வைத்திருந்தார் என்று குற்றத்திற்காக கைது செய்து இருக்கிறார்கள். இவர் மீது ஏற்கனவே சோழவந்தான் கிராமத்தில் பல்வேறு வழக்குகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தான் இவர் மீண்டும் ஒரு குற்றத்திற்காக கைது செய்து இருக்கிறார்கள்.
நேற்று இரவு ரோந்து பகுதி போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். கருப்பட்டி பகுதியில் சோழவந்தான் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கும் பொழுது தான் செல்வகுமார் என்பவர் அகப்பட்டு இருக்கிறார். அவரிடம் 800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்து இருக்கிறது. இதன் பெயரில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Polimer News