கஞ்சா வியாபாரிகளிடம் கட்டிங் வாங்கிய போலீசார் - அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி

கஞ்சா வியாபாரிகளிடம் மாமுல் வசூல் செய்த மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளளது.

Update: 2022-09-20 13:11 GMT

கஞ்சா வியாபாரிகளிடம் மாமுல் வசூல் செய்த மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளளது.


சமீபகாலமாக தமிழ்நாடு போதை பொருள் பழக்கத்தில் அடிமையாகி கொண்டிருக்கும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் ஒரு அதிரடி சம்பவம் நடந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்யும் சட்டவிரோத கும்பலோடு காவல்துறையினர் சிலர் கூட்டு சேர்ந்து கல்லா கட்டுவதாக எஸ்.பி தீபா சத்யனுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது.


அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர். அவர்களின் செல் போன் அழைப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன அதில் உறுதியான தகவல் கிடைத்தன, அந்த தகவல்களின் அடிப்படையில் சோளிங்கர் காவல் நிலைய ஏட்டு வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவல் நிலைய காவலர் ரமேஷ், அரக்கோணம் நகர காவல் நிலைய காவலர் கண்ணன் ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டார் எஸ்.பி தீபா சத்யன். 


Source - Junior Vikatan

Similar News