தடுப்பூசி வதந்தி.. மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்.!
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, ‘நடிகர் விவேக் மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கின் உடல்நிலை குறித்து சர்ச்சையான வகையில் பேட்டியளித்தார். நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்ட பின்புதான் உடல்நிலை சரியில்லாமல் போனது என்று கூறினார். இவரது பேட்டி சர்ச்சையான வகையில் உள்ளதாக பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, 'நடிகர் விவேக் மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் தடுப்பூசி பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.