காரில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி 34,500 பணம் பறித்த காவல் துறையினர் - அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி
காதல் ஜோடியிடம் பணம் வசூலித்த மூணு காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காதல் ஜோடியிடம் பணம் வசூலித்த மூணு காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் காதல் ஜோடியிடம் பணம் பறித்ததாக எழுந்த புகாரில் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த மாதம் பெருமாநல்லூரில் சாலையோரம் காரில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தனபால், கதிரவன், தமிழ் ஆகியோர் காரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்ததோடு அவர்களை மிரட்டி 34,500 வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட காதல் ஜோடி தரப்பில் திருப்பூர் எஸ்.பி அவர்களிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மூன்று காவலர்களும் பணியிடை இயக்கம் செய்யப்பட்டனர்.