நெல்லை: வெடிகுண்டு பிரிவில் பணியாற்றி இறந்த மோப்பநாய் பிராவோக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை.!

நெல்லை மாநகர காவல்துறை வெடிகுண்டு பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் பிராவோ வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.

Update: 2021-04-15 04:09 GMT

தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு பிரிவில் மோப்பநாய்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை தங்களுடன் சக வீரரை போன்று சக காவலர்கள் அதனுடன் பழகி வருகின்றனர்.

ஏதாவது விபத்து அல்லது நோய்வாய் பட்டு இறந்து போனால் அதற்கு காவல்துறையினர் உரிய மரியாதை கொடுத்து அடக்கம் செய்வது வழக்கம். அந்த வகையில், நெல்லை மாநகர காவல்துறை வெடிகுண்டு பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் பிராவோ வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.




 


இதனையடுத்து 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.காவல்துறையில் பல ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் இந்த பிராவோ பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News