காவலர் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!

காவலர் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!;

Update: 2021-02-06 16:29 GMT

தமிழக காவலர்களுக்கு என்று மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இதனை தரம் உயர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல் மருத்துவமனைகள் அனைத்தும் முழுநேர மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

மேலும், சென்னை, சேலம், நெல்லையில் உள்ள பகல்நேர காவல் மருத்துவமனைகள் நவீன உபகணரங்களுடன் 24 மணி நேரமும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் அனைத்து காவலர்களுக்கும் எந்த நேரத்திற்கு சென்றாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வசதி கிடைக்கிறது.

Similar News