காரிமங்கலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைப்பு

காரிமங்கலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைப்பு

Update: 2021-01-31 10:07 GMT

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் உடனிருந்தனர்.

இன்று தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஆனது, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனைவருக்கும் சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. மேலும், வெளியூர் செல்பவர்களின் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் போலியோ இல்லாத நிலையை உருவாக்கியுள்ள பெருமை இந்தியாவை சாரும். மற்ற நாடுகளில் இன்னும் போலியோ நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News