பொள்ளாச்சி பாலியல் விவகாரம்! 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை! மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்! 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை! மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பொள்ளாச்சியில் 200 இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த குற்றவாளிகளுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி இளநீர் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் மிகவும் பெயர் பெற்ற ஊர் என்றும் சொல்லலாம். ஆனால் அப்படிப்பட்ட ஊரில் பெண்களை சித்ரவதை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இதனிடையே மீண்டும் பொள்ளாச்சி வழக்கில் அருளானந்தம் மற்றும் ஹேரன் பால், மைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்நிலையில், கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோன்று கைது செய்யப்பட்டுள்ள 3 குற்றவாளிகளுக்கும் நீதிமன்ற காவல் பிப்ரவரி 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.