முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி.!

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-06 05:45 GMT

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் நடந்து முடிந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அப்போது அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


 



இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News