தமிழர் திருநாளான தைப்பொங்கல்: உலகம் முழுவதும் விமர்சையாக கொண்டாட்டம்!

Update: 2022-01-14 05:03 GMT
தமிழர் திருநாளான தைப்பொங்கல்: உலகம் முழுவதும் விமர்சையாக கொண்டாட்டம்!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் இன்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் திருநாளான பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் பொங்கல் கொண்டாட்டம் கலை கட்டத்தொடங்கியுள்ளது.

அதிகாலையில் தங்கள் வீடுகளின் முன்பு அடுப்பு அமைத்து, புது நெல்லை கொண்டு பானையில் பொங்கல் வைத்து அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று குடும்பத்தினரும், சுற்றத்தினரும் குலவையிட்டு தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்திருநாளை தமிழர்கள் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News