தமிழகம் முழுவதும் கோலாகலமாக தொடங்கிய பொங்கல் பண்டிகை.!

தமிழகம் முழுவதும் கோலாகலமாக தொடங்கிய பொங்கல் பண்டிகை.!

Update: 2021-01-14 10:09 GMT

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வருடம்தோறும் பொங்கல் விழா 4 நாட்கள் உற்சாகமாக நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் பொங்கல் விழா நேற்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகையின் துவக்கமான போகிப் பண்டிகை நேற்று (13ம் தேதி) கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற சான்றோர் வாக்கின்படி, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துவர். மேலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி, நல்ல எண்ணங்கள் மேலோங்கும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் போகி கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் ‘தை’ முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாகவும், உற்சாகமுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதியப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு படையலிட்டு இந்த பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டின் முன் மா, வேப்பிலை உள்ளிட்டவற்றை அலங்காரத் தோரணங்களாக கட்டி, வீடுகளுக்கு முன்னால் கலர் கலர் கோலமிட்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர்.

Similar News