பொங்கல் பரிசு ரூ.1000 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை: மக்கள் புறக்கணிப்பு செய்தது ஏன்?

பொங்கல் பரிசு தொகையான ரூ.1000 பணத்தை 4.40 லட்சம் மக்கள் வாங்கவில்லை.

Update: 2023-01-31 01:03 GMT

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 வழங்க அரசு உத்தரவிட்டது. குறிப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதில் பல்வேறு மக்கள் இந்த ஒரு பரிசு தொகையை வாங்க மறுத்து இருக்கிறார்கள் என்பது தற்பொழுது வெளிவந்து இருக்கிறது. அதன்படி தகுதி உள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் பணம் என்று தொகையை ரேஷன் கடைகளில் அனுப்பி வைக்கப்பட்டது.


ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கி இருந்தாலும் சிலர் வேண்டாம் என்று தங்களுடைய புறக்கணிப்பை தெரிவித்து இருக்கிறார்கள் இதில் அதிகபட்சமாக சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும் குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1823 பெயரும் இந்த ஒரு தொகையை வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதனால் பெரும்பாலான மக்கள் அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறார்கள். இதன் அர்த்தம் மக்கள் அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவூலத்திற்கு 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்து இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News