ஜனவரி 13க்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கனும்.. தமிழக அரசு.!

ஜனவரி 13க்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கனும்.. தமிழக அரசு.!

Update: 2020-12-23 07:09 GMT

தமிழகம் முழுவதும் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: வரும் தைபொங்கல் முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதார்களுக்கு ரூ.2,500 ரொக்கப்பணம் மற்றும் சீனி, முழுகரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை வரும் ஜனவரி 13ம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும். இதற்கான டோக்கன்களை வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் விநியோகிக்க வேண்டும். மேலும் எக்காரணத்தை கொண்டும் ரொக்கப்பணத்தை உறையில் வைத்து வழங்ககூடாது. முற்பகலில் 100 பேர் பிற்பகலில் 100 பேர்களுக்கு என வழங்கும் வகையில் டோக்கன் அளிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News